மோடியின் செல்லாத அறிவிப்பின் அரசியல் – ஜெயரஞ்சன்
தலைமை அமைச்சர் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இரு வாரங்கள் ஆன பின்பும் நிலைமை சீராகாமல் சாமானியர்கள் திண்டாடி தெருவில் நிற்கும் அவலம் தொடர்கிறது. இந்த நடவடிக்கையால் சாமானியர்கள் படும்பாடு வீணாகாதாம். அவர்களது தியாகங்களுக்கு பயன் இருக்குமாம். பெரும் நிலப் பிரபுக்களும் செல்வந்தர்களும் தலைமை அமைச்சர் மீது கோபமாகஇருக்கிறார்களாம்.நாட்டின்வளர்ச்சி பெருகுமாம். கள்ளப் பணம் / கறுப்புப் பணம் ஒழிவதால் ஏழைகள் வாழ்வு ஏற்றம் பெறுமாம். இவை யாவும் இந்த ‘செல்லாத’ அறிவிப்பினை வெளியிட்ட தலைமை அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் முன்வைக்கும் விவாதங்கள். இந்த விவாதங்களில் உண்மை உள்ளதா? ஏழைகள் பயன் பெறுவார்களா? பெரும் செல்வந்தர்கள் துயரப்படுவார்களா? உண்மை நிலவரம் என்ன? இன்று வெளிவந்துள்ள ஒரு அறிக்கை இந்த வாதங்களின் அடிப்படையில்லா பொய்மையை நிறுவுகிறது. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் ஒரு விழுக்காட்டினரிடம்தான் நாட்டின் 58.4% செல்வம் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆய்வு கண்டடைந்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின்...