குஜராத், தலித் மக்களின் புரட்சி
செத்த மாட்டைப் புதைக்க மாட்டோம்; சாக்கடைக் குழியில் இறங்க மாட்டோம்! குஜராத், தலித் மக்களின் புரட்சி “செத்த மாடுகளைப் புதைப்பது உள்ளிட்ட இழிவான வேலைகளை செய்ய மாட்டோம்” என்று, தலித் மக்கள் போர்க்கொடி உயர்த்திய மகிழ்ச்சியான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் செத்த பசுமாட்டுத் தோலை உரித்தார்கள் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ள ‘பசு பாதுகாப்பு’ அமைப்பைச் சார்ந்த வன்முறையாளர்கள், தலித் இளைஞர்களை ஆடைகளைக் களைந்து மூர்க்கத்தனமாக தாக்கினர். இந்த செய்தி குஜராத் தலித் மக்களை கொதித்தெழச் செய்துவிட்டது. மாட்டுத் தோலை விற்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள் தலித் மக்கள். செத்த மாடுகளின் தோலை உரிக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் வன்முறையில் ஈடுபடுவது அவர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கிறது. இனி செத்த மாடுகளை புதைக்க மாட்டோம் என்று குஜராத்தில் தலித் மக்கள் அறிவித்து விட்டதால், 200 செத்த மாடுகள் புதைக்கப்படாமல் துர்நாற்றம் அடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் சபர்மதியில் தலித் மக்கள் கடந்த ஞாயிற்றுக்...