Tagged: சூழலியல் போராளி

சூழலியல் போராளி பியூஷ் கைதுக்கு கண்டனம்

17-7-2016 ஞாயிறு அன்று காலை 11-00 மணிக்கு, ஏஎலம் குடிமக்கள் குழுவின் சார்பாக, பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளான பியூஸ் மானுஷ், ஈசன் கார்திக், முத்து செல்வன் ஆகியோரை விடுவிக்கவும், அவர்கள்மீது பொய்யாக புனையப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுமாறும், நீதிமன்றக் காவலில் இருந்த அவர்களை நிறையில் தாக்கி சித்திரவதை நெய்த சிறைத்துறையினர்மீது குற்றவியல் வழக்குப் பதிந்து இடைநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் குடிமக்கள் குழுவின் பொறுப்பாளர் டாக்டர் விஜயன், பிரபல மருத்துவர் கே.என்.ராவ், பசுமை இயக்கம் டாக்டர் ஜீவானந்தம், கோவை டாக்டர் ரமேஷ், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன், சென்னை, கோவை, தருமபுரி பகுதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினர், தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமைக்குழு உறுப்பினர் ஒசூர் மாரிமுத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், மாநகர செயலாளர் பரமேஸ் உள்ளிட்டோர் சுமார் 300 பேர் கூடியிருந்தனர். சிறையில் பியூஷைச் சந்தித்துவந்திருந்த வழக்குரைஞர்...