Tagged: சுயமரியாதை கருத்தரங்கம்

விடுதலை இராசேந்திரன் பங்கேற்று உரை மாற்றுத் திறனாளிகள் நடத்திய சுயமரியாதை கருத்தரங்கம்

விடுதலை இராசேந்திரன் பங்கேற்று உரை மாற்றுத் திறனாளிகள் நடத்திய சுயமரியாதை கருத்தரங்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கான ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின கருத்தரங்கம் மற்றும் முதலாம் ஆண்டு உரிமை முழக்க விழா 9.1.2016 காலை 10 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் புத்தன் கலைக் குழுவினர் பறை இசையுடன் தொடங்கியது. முதல் நிகழ்வாக, ‘சுயமரியாதை பார்வையில் மாற்றுத் திறனாளிகள் – மானம் – மாண்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தலைமையேற்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சுயமரி யாதைக்கான விளக்கங்களை முன் வைத்து உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: “உலகிலேயே சுயமரியாதை என்ற சொல் இந்த மண்ணில்தான் அறிமுகமானது. அதை அறிமுகப்படுத்தி, சுயமரியாதைக்காக மக்களை திரட்டியவர் பெரியார். உலகம் முழுதும் ஒடுக்கப்பட்ட இனங்கள் சமத்துவத்துக்கும் உரிமைக்கும் போராடின. அதற்கான நியாயங்களை அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் இந்த நாட்டில்தான் ஒடுக்கப்பட்ட ஜாதிக் காரனாகவும், உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக வும் உயிர் வாழ்வதை ‘தர்மமாக’ ஏற்றுக்...