சீமானின் அநாகரீகம்: பாண்டேயின் பார்ப்பனியத்துக்கு கழகம் கண்டனம்
‘தந்தி’ தொலைக்காட்சியில் மூத்த பொதுவுடைமைவாதி அருணனை ஒருமையில் இழிவாகப் பேசிய சீமானையும், இதை கண்டிக்காத ‘தந்தி’ தொலைக்காட்சி நெறியாளர் பாண்டேயையும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டித்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கை. ‘தந்தி’ தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு நேரலை விவாதத்தில் பங்கு கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தை முன் வைத்த மூத்த பொதுவுடமைவாதி, எழுத்தாளர், பேராசிரியர் அருணனை அருவருக்கத்தக்க வகையில் தடித்த வார்த்தைகளால் பேசியது கண்டிக்கத்தக்கதாகும். தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தையோ அல்லது விமர்சனத்தையோ முன்வைக்கும் போது அதற்கு தக்க பதிலை, தன் நிலைப் பாட்டை நாகரீகமாக வெளிப்படுத்துவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்தில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். மாற்றுக் கருத்துக்கு தக்க பதில் சொல்ல இயலாத நிலையில் ஒரு மூத்த பொதுவுடமைவாதியை நோக்கி, ‘உனக்கு தத்துவம் என்ன உள்ளது?’ என கேட்பதும், ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசுவதும், மோசமாக...