Tagged: சித்தாராமையா

சோதிடத்தை நம்பும் அரசியல்வாதிகள்

சோதிடத்தை நம்பும் அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகளை சோதிடம் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றை மத்திய அரசின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற என்.ஆர்.கிருஷ்ணன், ‘இந்து’ ஆங்கில ஏட்டில் (அக்.6) எழுதியுள்ளார். பெயர்களை குறிப்பிடாமல் பல சுவையான சம்பவங்களை அவர் பதிவு செய்துள்ளார். 1980 ஆம் ஆண்டில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் முதல்வர் அமைச்சர் களோடு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பதற்கு சோதிடர்களைக் கலந்து ஆலோசித்தார். நாள், நேரம் குறித்து அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப் பட்டன. காலை 10 மணிக்கு பதவி ஏற்க வேண்டும். பதவி ஏற்கும் நாளில் சோதிடர்கள் முதல்வரை அணுகி 10.02க்கு முதல்வர் பதவி ஏற்காவிட்டால், 5 ஆண்டுகாலம் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறவே, எல்லா நிகழ்ச்சிநிரல்களும் அவசரமாக மாற்றியமைக்கப்பட்டு, சோதிடர்கள் குறித்த சரியான நேரத்தில் முதல்வர் பதவி ஏற்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் டெல்லிக்கு பறந்து போய் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த நாள்...