Tagged: சாமி சிலைகள் திருட்டு

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

திருவண்ணாமலையில் “உலக நன்மைக்காக” ஜெபம்-பூஜை நடத்திய சாமியார்கள், தங்களுக்கு நிலம், காப்பகம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.         – ‘தமிழ் இந்து’ செய்தி உலக நன்மையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்; எங்கள் கோரிக்கைகளை அரசுதான் கவனிக்க வேண்டும் என்கிறார்கள். சாமியார்களுக்குக்கூட பகுத்தறிவு வந்துடுச்சு! கூடங்குளம் அணுமின் நிலைய பராமரிப்புப் பணியின்போது ஆறு ஊழியர்கள் படுகாயம் அடைந்ததற்கு வால்வு பழுதடைந்ததே காரணம் என்று கூறுவது தவறு. ஊழியர்கள் சரியாகக் கையாளாமல் போனதே காரணம். – அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் மனிதர்களுக்கு ஆபத்துன்னா, அது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால், எந்திரங்கள் பாதுகாப்பா இருக்குதுன்னு சொல்லவர்றீங்க…. நல்ல மனசு! வங்கிகளில் பெருமுதலாளிகள் வாங்கிய ரூ.2.40 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்படவில்லை. 10 ஆண்டுகளில் வராத கடனாக தள்ளுபடி செய்யப் பட்டது ரூ.2 லட்சம் கோடி. – வங்கி ஊழியர் சங்கம் தகவல் உஷ்… சத்தமாய் பேசாதீங்க… பெரு முதலாளிகள் காதுல விழுந்தா...