Tagged: சாத்தாணி

அந்த காலத்தில் பார்ப்பனர்களை திருமணத்துக்கு அழைப்பதில்லை

பார்ப்பானை வைத்துத் திருமணம் செய்வதெல்லாம் ஒரு நூற்றாண்டுக்குள்தான் பரவிற்று என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது – 60, 65 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வந்து 500 பேர்களுக்கு மேலாக மொய் (அன்பளிப்பு) எழுதினார்கள். அவர்களுக்குத் திருப்பி மொய் எழுதுவதற்கு என்னைத்தான் என் வீட்டிலே அனுப்புவார்கள். அதனால் பல திருமணங்களைப் பார்த்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இப்படி எல்லோரும் பார்ப்பானைத் திருமணத்திற்கு அழைப்பதில்லை. அப்படி திருமண வீட்டிற்குப் பார்ப்பான் வந்தால் பிச்சை வாங்குவதற்காகத்தான் அங்கு வருவான். அதுவும் உள்ளேகூட அழைப்பதில்லை. வெளியே ஒரு திண்ணையில் வந்து உட்கார்ந்துவிட்டுப் போகும்போது ஆளுக்கு ஒரு அணா, இரண்டனா, பெரிய மனிதர்களாக இருந்தால் ஆளுக்கு 8 அணா, 1 ரூபாய் பிச்சையாய்க் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு சென்று விடுவான். கலியாணம் செய்து வைக்கப் பரியாரி (நாவிதன்) தான் வருவான். அவன்தான் மணமக்களை ஆசி கூறி வாழ்த்திச் செல்வான். அப்பொழுதெல்லாம் மணப்பெண்ணுக்கு யார்...