Tagged: சாதுர்ய பனியா

காந்தியை ஜாதி கூறி விமர்சித்த அமீத் ஷா

பா.ஜ.க. தலைவர் அமீத் ஷா, காந்தியை அவரது ஜாதிப் பெயரைக் கூறி விமர்சித்திருக்கிறார். “அவர் ஒரு சாதுர்யமான பனியா. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்தவர். அதனால் காங்கிரசை கலைக்கச் சொன்னார்” என்று பேசி இருக்கிறார். அமெரிக்காவில் வாழும் காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியும், மற்றொரு பேரனும், மேற்கு வங்க ஆளுநராக இருந்தவருமான கோபால கிருஷ்ண காந்தியும் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திரா குகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமீத்ஷா கூறிய ‘சாதுர்ய பனியா’ என்ற காந்தி மீதான விமர்சனத்தைத் தொடர்ந்து பனியா, பார்ப்பனர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிக் குழுக்கள் பற்றி ஆங்கில ஏடுகள் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 17, 2017) வெளியிட்ட ஒரு கட்டுரையில் வர்ணாஸ்ரம சமூக அமைப்பில் பார்ப்பனர், சத்திரியருக்குக் கீழே பனியாக்கள் வைக்கப்பட்டிருப்பதை பனியாக்கள் விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறது. குஜராத் சமூகத்தில் ஜாதியின்...