Tagged: சரசுவதி பூஜை

சரஸ்வதி பூஜை-ஆயுத பூசை ஆபாசங்கள்!

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியை யும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே, அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்” என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும்,...

தலையங்கம் – ‘சரசுவதி’ பூஜை வேண்டாம்; காமராசர் விழா நடத்துங்கள்!

இந்து பார்ப்பன பண்டிகைகளின் உள்ளடக்கங்கள் மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. உள்ளடக்கங்கள் மாறினாலும் ‘இந்து’ மத நீரோட்டத்துக்குள்ளேயே மக்களை நிறுத்தி வைக்கத் துடிக்கும் பார்ப்பனியம் இந்தப் பண்டிகைகள் சமூகத்தில் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்றே விரும்புகிறது.                                                                                      அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, மதங்களுக்கு அப்பாற்பட்ட அரசு அலுவலகங்களில் காவல் நிலையங்களில் ‘ஆயுத பூஜை’ கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இப்படி அரசு அலுவலகங்களை ‘பஜனை மடங்’களாக மாற்றக் கூடாது என்று அரசு ஆணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இருப்பதை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சுட்டிக்காட்டி அவற்றை நகல் எடுத்து அனுப்பி வைத்து தொடர்ந்து போராட்டங்களை இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். மதம் சார்ந்த நம்பிக்கைகளோடு மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஓர் உளவியல் அடங்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி கவலைப்படாமல் எந்த எல்லை வரையும் சென்று வீண் விரயங்களில் பணத்தை செலவிடும் ‘உளவியலை’ மதம் சார்ந்த பண்டிகைகள் உருவாக்கி விடுகின்றன. தொழில்துறை அமைப்பான ‘அகோசம்’ வரவிருக்கும் ஆயுத பூஜை, சரசுவதி பூஜை,...

சரசுவதிக்கு பூஜை போட்டவன் தற்குறி; மலம் துடைத்தவன் அறிவாளி – பெரியார்

சரசுவதிக்கு பூஜை போட்டவன் தற்குறி; மலம் துடைத்தவன் அறிவாளி – பெரியார்

சரசுவதி பூசை என்பது ஓர் அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி – அதற்குச் சரசுவதி என்று பெயர் கொடுத்து, அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி இல்லாமல் சாமியை நம்பிக் கொண்டு இருக்கும்படிச் செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளி யாகிக் கொண்டு நம்மைப் படிப்பு வர முடியா ‘மக்குகள்’ என்று சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள். முதலாவது, சரசுவதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரசுவதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி அதற்கு...