‘சமபந்தி’க்கு தடை போட்ட திருவையாறு சமஸ்கிருத கல்லூரி
1940ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது, அன்றைய தஞ்சை மாவட்டம் திருவை யாற்றில் ஒரு சமஸ்கிருத கல்லூரி இருந்தது. அப்போது மாவட்டம் தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு மாவட்ட வாரியம் (District Board) என்ற அமைப்பின் நிர்வாகத்தில் மாவட்டங்கள் இயங்கின. இந்த சமஸ்கிருத கல்லூரி, ‘மாவட்ட வாரிய’ நிர்வாகத்தின் கீழ் இயங்கிய ஒரு அரசு நிறுவனம். இதில் சமஸ்கிருத மொழி மட்டுமே கற்பிக்கப்பட்டது. எனவே, படித்தவர் களும் பார்ப்பனர்கள் மட்டுமே! அப்போது மாவட்ட வாரியத் தலைவராக இருந்தவர் சர். ஏ.டி. பன்னீர் செல்வம். பெரியாரின் சுயமரியாதை கருத்துகளை தீவிரமாக ஆதரித்தவர். சமஸ்கிருத கல்லூரியில் தமிழும் கற்றுத் தர வேண்டும் என்று உத்தரவிட்டார். பார்ப்பனர்களோ சமஸ்கிருத கல்லூரியில் தமிழ் நுழைந்தால் புனிதம் கெட்டுவிடும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மிரட்டலுக்கு பன்னீர்செல்வம் பணியவில்லை. சமஸ்கிருத கல்லூரியில் தமிழ் படிக்க பார்ப்பனரல்லாத மாணவர்கள் சேர்ந்தனர். இதனால் மாணவர் விடுதியில் பிரச்சினை உருவாக்கப்பட்டது. பார்ப்பன...