Tagged: சமஸ்கிருதத்தில் வரவேற்பு

சமஸ்கிருதத்தில் வரவேற்பு: எதிர்த்தார் காந்தி

சமஸ்கிருதத்தில் வரவேற்பு: எதிர்த்தார் காந்தி

20.9.1927 அன்று திருச்சியில் பார்ப்பனக் கல்வி நிறுவனமான தேசியக் கல்லூரியில் காந்தியார் பேச வந்தார். பார்ப்பனர்கள் அவருக்கு சமஸ்கிருதத்தில் எழுதி வரவேற்பு பத்திரம் வாசித்தார்கள். காந்தியார் பேச எழுந்தார். பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு, ‘இந்தக் கூட்டத்தில் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இருந்தால் கையை உயர்த்துங்கள்’ என்று கேட்டார். வெகுசிலரே கையை உயர்த்தினார்கள். “மிகப் பெரும்பாலாருக்கு சமஸ்கிருதம் தெரியாதபோது, அந்த மொழியில் ஏன் வரவேற்பு பத்திரத்தை தயாரிக்க வேண்டும்?” என்று  கேட்டார். பார்ப்பனர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ‘வரவேற்புரையை தமிழில் எழுதியிருக்கலாம். வேண்டுமானாhல் அதன் மய்யக் கருத்தை இந்தியிலோ சமஸ்கிருதத்திலோ கூறியிருக்கலாம்’ என்றார். கூட்டம் முடிந்து திரும்பும்போது உடன் வந்த காகா கலேல்கர்  (இவர்தான் முதன்முதலாக அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர்  ஆணையத்தின் தலைவராக இருந்தவர் – மராட்டிய பார்ப்பனர்),  காந்தியிடம் இது குறித்து கேட்டார். -“உங்களுக்குத்தான்  சமஸ்கிருதம் பிடிக்குமே; அப்படி இருந்தும் ஏன் எதிர்த்தீர்கள்?”  அதற்கு காந்தியார் சொன்ன பதில் இது: “எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்களின்...