சமஸ்கிருதத்தில் கணித அறிவியலா? பொய் பிரச்சாரத்தின் முகமூடி கிழிகிறது
‘நாசா’ கூறியிருக்கிறது; ‘அமெரிக்க பேராசிரியர் கண்டுபிடித்திருக்கிறார்’ – இப்படி எல்லாம் சங்பரிவார் கூட்டம், தங்களது போலி அறிவியலுக்கு சான்று களைக் காட்டுவார்கள். ஆராயப் புகுந்தால் கடைசியில் இவை எல்லாம் போலிச் சான்றுகள் என்ற உண்மை வெளிச்சத் துக்கு வரும். கடந்த சில மாதங்களாக மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒரு கதையை கூறி வருகிறார். “சமஸ்கிருதத்தில், ‘சல்பாசூத்திரம்’ (Sulbasutras) என்று ஒன்று இருக்கிறது; கணிதத்தில் கிரேக்கர்கள், ‘பித்தகோரஸ்’ சூத்திரத்தை கண்டறிவதற்கு முன்பே, சல்பா சூத்திரத்தில் இந்தக் கணிதம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன” என்று கூறும் ஸ்மிருதி இராணி, அய்.அய்.டி. மாணவர்களின் அறிவியலுக்கு சமஸ்கிருதம் பயன்படும் என்றும் கூறி வருகிறார். இதன் காரணமாகவே அய்.அய்.டி. மாணவர் களுக்கு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக கற்பிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் நியாயப் படுத்துகிறார். ஸ்மிருதி இராணியின் கதை இத்துடன் முடியவில்லை. அமெரிக்காவின் கோர்வெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், 1990இல் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்து...