Tagged: சதாசிவம்

‘பெரியார் பேரொளி’ சதாசிவம் நினைவு நாள்

‘பெரியார் பேரொளி’ சதாசிவம் நினைவு நாள்

‘பெரியார் பேரொளி’ பட்டுக் கோட்டை வளவன் (எ) சதாசிவம் முதலா மாண்டு நினைவு நாளான 19.1.2017 அன்று மேட்டூர் அணை தந்தை பெரியார் படிப்பகத்தில் அவரின் உருவப் படத்திற்கு கழகத் தலைவர்  கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராசு, நகர செயலாளர் அ. சுரேசுகுமார், மாவட்ட அமைப்பாளர் அ. அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு. குமரப்பா, மாவட்ட பொருளாளர் சு. சம்பத் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 02022017 இதழ்

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது கரைபுரண்ட உற்சாகம் – உச்சநீதிமன்றம் – இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தபோது தலைகீழாக மாற்றி ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய 7 சட்டப் பிரச்சினைகளை முன் வைத்துள்ளது, தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு. சட்டங்களின் நுணுக்கங்கள் விவாதங்கள் எப்படி இருந்தாலும், ஒரு சாமான்யனின் பார்வையில் நீதி மறுக்கப்படுகிறது என்ற வேதனைதான் மிஞ்சுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்ட இவர்கள், 23 ஆண்டுகாலம் சிறையில் கழித்துவிட்டார்கள். மரண தண்டனையைக் குறைக்கக் கோரி கருணை மனு தாக்கல் செய்யப்பட்டு, அது 11 ஆண்டுகாலம் அது கிடப்பில் போடப்பட்டது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான உயிர் வாழும்...

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சதாசிவம் கோவையில் 18-04-2014 அன்று நடைபெற்ற நீதிபதிகளின் மாநாட்டின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் “வழக்கின் தீர்ப்பினை ஒரு வாரத்திற்குள் (தான் ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாக) வழங்கப்படும், அதுவரைப் பொறுத்திருங்கள்” எனக் கூறியுள்ளார். அவரது பதவிக்காலம், அவரது பிறந்த நாள் அடிப்படையில் 26-04-2014 – உடன் நிறைவடைகிறது. அந்த அடிப்படையில் 25-04-2014க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதுவரை பொறுத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். அவர் பேட்டியில் கூறியிருக்காவிட்டாலும், எந்த ஒரு நீதிபதியும் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பை, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக வழங்குவது என்பது மரபான ஒன்றுதான். ஆனால் ஏதோ 24-04-2014 அன்று தமிழ்நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதைக் கணக்கில் கொண்டே, பேட்டி கொடுக்கப்பட்டதைப் போல, தலைமை நீதிபதியின் இயல்பான பேட்டியை விமரிசனம் செய்து தி.மு.க. தலைவர் கலைஞர்...