Tagged: சட்டமன்ற தேர்தல் 2016

திவிக தேர்தல் நிலைப்பாடு விளக்கப் பொதுக்கூட்டம்

”தேர்தல் நிலைப்பாடு விளக்க பொதுக்கூட்டம்”, கெலமங்கலம். 4-5-2016 புதன் அன்று மாலை 5-00 மணிக்கு, கிருட்டிணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேருந்து நிலையத் திடலில், கிருட்டிணகிரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக தேர்தல் நிலைப்பாட்டு விளக்கப் பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவர் தி.க.குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தலைவர் குமார் , மாவட்டப் பொருளாளர் மைனர் (எ) வெங்கடகிரியப்பா, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் பழனி நன்றி கூறினார். தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழ்கிற அப்பகுதியில் மைனர் வெங்கடகிரியப்பா தெலுங்கு மொழியிலேயே உணர்வுபூர்வமாக, அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிற தளி இராமச்சந்திரனின் அடாவடி சமூக விரோத நடவடிக்கைகளை விளக்கிப் பேசியதோடு, ஒரு பொதுவுடமைக் கட்சிக்கு இது ஒரு களங்கமே என்பதை விரிவாக விளக்கிப் பேசினார்....

தமிழக சட்டமன்ற தேர்தல் 2016

தமிழக சட்ட மன்ற தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு குறித்து கழக தலைமைக் குழுவின் முடிவுகள் ! இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் ! தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், இதர தொகுதிகளில் தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களையும் ஆதரிக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்துள்ளது. 19.4.2016 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி தோட்டத்தில் கழக தலைமைக் குழு கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் கூடியது. தலைமைக் குழுவின் விரிவான பரிசீலனைக்குப் பிறகு கீழ்க்கண்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 1) தமிழ்நாடு தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத அளவில் குழப்பங்களும்...