அறநிலையத் துறையை ஆட்டிப் படைக்கும் கேரள ஜோதிடர்
இந்து அறநிலையத் துறை, பல ‘புரட்சி’களை நடத்தி வருகிறது. “அறநிலையத் துறையின் செயல்பாடுகளில் மிஞ்சி நிற்பது கடவுள் நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? அம்மா நம்பிக்கையா?” என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் போலிருக்கிறது. கேரள நம்பூதிரிப் பார்ப்பன சோதிடர் ஒருவர் ஆலோசனைப்படி அறநிலையத் துறை தொன்மையான கோயில்களை இடித்து வருகிறதாம். நாமக்கல் மாவட்டம் திருமான்குறிச்சியில் உள்ள 100 ஆண்டுகால பழமையான மருதகாளி அம்மன் கோயில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலுள்ள 330 ஆண்டு பழமையான பெரிய நாயகி அம்மன் கோயில், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்திலுள்ள மாரியம்மன் கோயில் என்று கோயில்களை அறநிலையத்துறையே இடித்துத் தள்ளுகிறது. இந்தக் கோயில்கள் ‘அபசகுணமாக’ இருப்பதாக கேரள பார்ப்பன ஜோதிடர் கூறிய ஆலோசனைப்படி இந்த இடிப்பு நடக்கிறதாம். ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த ஒரு பார்ப்பனர் உயர்நீதிமன்றத்தில் இப்படி இடிப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் ‘அபசகுணம்’ என்ற காரணத்தைக்...