Tagged: கெமால்

துருக்கியில் கெமால் செய்த புரட்சி – மே.கா.கிட்டு

[துருக்கியில் கெமால்பாட்சா இஸ்லாமியராக இருந்தும் மதம் விதித்த பல கட்டுப்பாடுகளை தகர்த்து பெண்களை மதப்பிடியிலிருந்து விடுவித்தார் அரபு மொழியில் இருந்த இஸ்லாமிய நூல்களை சொந்த நாட்டு மொழியான துருக்கியில் மாற்றினார். துருக்கியின் முதல் குடியரசுத்தலைவராக 1923 முதல் 1938 வரை இருந்தவர் இஸ்லாமியராக பிறந்தாலும் ‘இறைமறுப்பே’ தனது மதம் என்று அறிவித்தவர் இராணுவ படைத்தளபதியாக இருந்தவர். பெரியார் கெமால் பாட்சா சீர்திருந்ங்களை வரவேற்று ‘குடிஅரசு’ இதழில் எழுதினார் கெமால் பாட்சா செய்த நன்மைகள் என்ற தலைப்பில் 30.11.1938 இல் சென்னை கடற்கரையில் பேசியதும் துருக்கியில் பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் தலையங்கமும் முறையே 30.11.1938, 11.12.1938 குடிஅரசு இதழ்களில் வெளிவந்தது] இசுலாமிய மதத்தில் பற்றில்லாத கெமால் உலக இசுலாமியக் கூட்டமைப்புக் கொள்கையை முற்றிலும் வெறுத்தார். மதம் விளைவிக்கும் கொடுமைகளுக்கே அவர் முற்றுப் புள்ளி வைக்க விரும்பினார். துருக்கி மக்களை மத மயக்கத் திலிருந்து நீக்கி மெய்யான தேசியப்பற்றை அவர்களிடம் உருவாக்குவதில் நாட்டம்...