வினாக்கள்… விடைகள்…!
நான்கு மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசை எழுப்புவதற்கான அலாரமா? காங்கிரசை அப்படி எழுப்பிவிடத்தான் முடியுமா? – அமர்த்தியாசென் இதற்கு நீங்களே விடை கூறிவிட்டால், மற்றொரு நோபல் பரிசை தட்டிக்கொண்டு போய் விடலாம், சார். பிணையில் விடுதலையான லாலுபிரசாத், சாமி தரிசனத்துக்குப் போனபோது, ஒரு போலீஸ் அதிகாரி, லாலு கால்களைக் கழுவினார். ஜார்கண்ட் அரசு விசாரணைக்கு உத்தரவு. – செய்தி அதெல்லாம் சுத்தமாகத்தான் கழுவி இருப்பார். நம்புங்கள். இதற்கெல்லாம் விசாரணையா? நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூற வேண்டும். – மன்மோகன்சிங் “பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது தான்; விரைவில் சரியாகி விடும்” என்ற நம்மால் செய்ய முடிந்த கொள்கையை அப்படியே சரியாகச் சொல்லணும்! ஆமாம். இறை நம்பிக்கைதான் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்! – ஜெயலலிதா பேச்சு அதனால என்னங்க பயன்? இறை நம்பிக்கை எதிர்க்கட்சிகளையே இல்லாமல் ஒழிக்குமா? அதைச் சொல்லுங்க. மகாராஷ்டிரா காங்கிரஸ் ஆட்சி வீட்டுவசதி வாரிய ஊழல் விசாரணை...