வினாக்கள்… விடைகள்…!
நாய் வளர்த்தால் குடும்பப் பிரச்சினை வராது; அது குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருகிறது. – அமைச்சர் ஜெய்பால் அரசு விழாவில் பேச்சு நல்ல யோசனை. அப்படியே அம்மா விடம் சொல்லி விலை இல்லா நாய் வழங்கும் திட்டத்தை அறிவிக்கச் சொல்லுங்க. தேர்தலில் குடும்பம் குடும்பமா மகிழ்ச்சியா வாக்களிப் பாங்க! மும்பையில் ஏழுமலையான் கோயில் கிளையை கட்ட – மகாராஷ்டிரா அரசிடம் நிலம் வாங்க தேவஸ்தானம் முடிவு. – செய்தி அரசிடம் நிலம் வாங்கிடுவீங்க! ஏழுமலையானை யாரிடமிருந்து வாங்கப் போறீங்க? முடிகொட்டும் புற்று நோயாளிகளுக்கு ‘விக்’ தயாரிச்சு சென்னை கல்லூரி மாணவிகள் தங்கள் தலையை மொட்டைப் போட்டு முடிக் கொடை வழங்கினார்கள். – செய்தி “காணிக்கை”யை, “கொடை”யாக மாற்றிய சகோதரிகளே! நீங்களே அழகானவர்கள்! கெஜ்ரிவால் ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும்; சென்னையில் ஆம் ஆத்மி கட்சி அலு வலகம் முன் காங்கிரஸ் போராட்டம். – செய்தி ஒரு சந்தேகம்! இதுக்குப் போராட வேண்டிய இடம் காங்கிரஸ்...