வினாக்கள்… விடைகள்…!
பா.ஜ.கவில் நமோ மோடி பஜனை பாடுவதை ஏற்க முடியாது. – ஜஸ்வந்த் சிங் எவ்வளவு காலத்துக்குத்தான் ராம பஜனையே பாடிக் கொண்டிருப்பது? ஒரு மாற்றம் வேண்டாமா? எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெய லலிதாவை முதலமைச்சர் களாக்கியதே காங்கிரஸ் தான். – தங்கபாலு காங்கிரஸ் முதல்வர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்புகள் வந்தபோதும்கூட காங்கிரஸ் அதை உதறிவிட்டு, இவர்களை முதல்வராக்கியதா சொல்ல வர்றீங்க… அப்படித் தானே…. பா.ஜ.க. கூட்டணியை நடிகர் ரஜினி ஆதரிப்பதாக வெளிப் படையாக அறிவிக்க வேண்டும். – பா.ஜ.க. தலைவர்கள் வற்புறுத்தல் ஆமாம்! ரஜினி ‘வாய்ஸ்’ கொடுத்தால்தான் மோடி அலை வீசுதுன்னு மக்களை நம்ப வைக்க முடியும் ! குஜராத்தில் மனிதமலத்தை எடுக்கும் தொழிலில் 13 லட்சம் பேர் ஈடுபட் டுள்ளார்கள். – கர்மோச்சி அந்தோலன் ஆய்வு மய்யம் தகவல்! சும்மா சொல்லக்கூடாது; மோடி எப்படி எல்லாம் வேலை வாய்ப்புகளை உருவாக்குறாரு, பாருங்க! கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 ஆவது பிரிவுகள் தொடங்க, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்...