அன்று ‘குடவோலை’ இன்று ‘ஏலம்’
சோழர் கால ஆட்சியிலேயே ‘குடவோலை’ முறை வழியாக மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று பெருமையுடன் வரலாறுகள் பேசப்படுகின்றன. இந்த குடவோலை முறை எப்படி நடந்தது? காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசின் தொல்லியல் துறை கண்டுபிடித்த கல்வெட்டுகள் குறித்து, எழும்பூர் அருங்காட்சியகத்தில் அந்தத்துறை சார்பாக அண்மையில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய தொல்லியல் துறை அதிகாரி நீலகண்டன், ‘உத்திரமேரூர்’ பகுதியில் நடந்த குடவோலை முறை பற்றி விளக்கம் அளித்தார். இந்த முறைப்படி, “தேர்தலில் போட்டியிடுவோர் நான்கு வேதங்களைப் படித்திருக்க வேண்டும்” என்ற நிபந்தனையிருந்திருக்கிறது. கல்வெட்டுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல் இது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பார்ப்பனர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதை இத்தகவல் உறுதிப்படுத்துகிறது. இதுதான் சோழர்கள் காலத்தில் நடந்த ‘குடவோலை ஜனநாயகம்’. குடவோலை முறையை உலகுக்கே அறிமுகம் செய்த ஊர் உத்திரமேரூர்தான் என்று வரலாறுகளில் எழுதுகிறார்கள். அதன் ‘யோக்கியதை’ இப்படித்தான் இருந்திருக்கிறது. இப்போது அதே உத்திரமேரூரில்...