குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் முடிவெய்தினார்
பெரியார் இயக்கத்தின் குடும்பத்தில் வந்த வரும், மிகச் சிறந்த பெரியாரிய லாளருமாகவும் திகழ்ந்த குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் (74) ஜூன் முதல் தேதி குடந்தையில் முடிவெய்தினார். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் திராவிடர் கழக இளைஞரணி தலைவராக செயல்பட்ட ஆர்.பி.எஸ். ஸ்டாலின் ஏராளமான இளைஞர்களை பெரியார் இயக்கத்துக்குள் கொண்டு வந்தவர். மரணமடைந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சக்கரவர்த்தி, திராவிடர் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பிறகு அந்தக் கழகத் தலைமையால் நீக்கப்பட்ட மறைந்த வள்ளிநாயகம் போன்றவர்களை உருவாக்கியவர். அவரது தலைமைப் பண்புக்கு ஏராளமான சான்றுகளைக் கூறலாம். 1974ஆம் ஆண்டு பெரியார் முதலாமாண்டு நினைவு நாளை வடநாட்டு எதிர்ப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு போராட்ட நாளாக அப்போது கழகத் தலைவராக இருந்த அன்னை மணியம்மையார் அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் இராம லீலா மைதானத்தில் ‘இராவணன், கும்பகர்ணன், மேகநாதன்’ என்ற இராமாயணத்தில் திராவிடர்களாக சித்தரிக்கப்படும் கதை மாந்தர்களை தீயிட்டு எரிக்கும் ‘இராம லீலா’வை...