குஜராத்தில் தலித் மக்களின் புரட்சிக் குரல்! பார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்!
சட்டம் ஒழுங்கை தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு தலித் மக்களை தாக்கத் தொடங்கிவிட்டது. ‘பசு கண்காணிப்பு’ என்ற பெயரில் மதவெறி வன்முறை கூட்டம், அதிகார அமைப்பிலும் காவல் துறையிலும் ஊடுருவி நிற்கும் மதவெறி சக்திகள் இந்த வன்முறைக்கு துணை நிற்கின்றன. குஜராத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி செத்துப் போன பசுமாட்டின் தோலை விற்பனை செய்வதற்கு உரித்தார்கள் சில தலித் இளைஞர்கள். அதுவே அவர்களின் வாழ்க்கைக்கான தொழில். ‘பசு கண்காணிப்பு’ என்ற போர்வைக்குள் பதுங்கி நிற்கும் மனித மிருகங்கள் நான்கு தலித் இளைஞர்களை மூர்க்கத்தனமாக தாக்கினர். இது நடந்தது சவுராஷ்டிரா அருகே உள்ள ‘உனா’ எனும் கிராமத்தில். சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் பதிவேற்றப்பட்டன. பிரச்சினை பற்றி எரியத் தொடங்கிவிட்டது. இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய மாநிலம் குஜராத் என்று பார்ப்பன ஊடகங்கள் எழுதிக் குவித்தது. அத்தனையும் அப்பட்டமான பொய். இப்போது உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. குஜராத் மக்கள் தொகையில் 8...