Tagged: குஜராத்

இங்கே ‘இரட்டைக் குவளை’யின் பெயர் ‘இராமபாத்திரம்’:மோடியின் குஜராத்தில் தீண்டாமை அவலங்கள்

இங்கே ‘இரட்டைக் குவளை’யின் பெயர் ‘இராமபாத்திரம்’:மோடியின் குஜராத்தில் தீண்டாமை அவலங்கள்

நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு. அதில் தலித் மக்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளைப் புனிதமாகக் கருதுகின்றார்கள். “நுஒயீநசநைnஉந in ளுயீசைவைரயடவைல” ஆன்மிக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால் தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலாய தொழில் களை இத்தனை காலமாக செய்கின்றார்கள். அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார். அவர் அந்த நூலில் எழுதுகிறார்: “ஐ னடி nடிவ நெடநைஎந வாயவ வாநல யசந னடிiபே வாளை தடிb தரளவ வடி ளரளவயin வாநசை டiஎநடலாடிடின hயன வாளை நெநn ளடி, வாநல றடிரடன nடிவ hயஎந உடிவேiரேநன றiவா வாளை வலயீந டிக தடிb, பநநேசயவiடிn யகவநச பநநேசயவiடிn…...

குஜராத் இனப் படுகொலையை தூண்டியவர் மோடி

குஜராத் இனப் படுகொலையை தூண்டியவர் மோடி

2013 செப்டம்பர் 18 அன்று கலவரத்தில் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. எஷான் ஜஃரியின் மனைவி திருமதி ஜக்கியா ஜஃப்ரி, அகமதாபாத் 11 ஆவது பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வமான குற்றமுறையீட்டின் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறோம். அதில் மோடிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்: 2002 பிப்ரவரி 27 அன்று துயரார்ந்த கோத்ரா சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு ‘மகாயஜ்னா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ இந்து பரிசத் அமைப்புகளின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து, புலனாய்வு அமைப்புகள் அனுப்பிய செய்திகளை அரசு வேண்டுமென்றே உதாசீனம் செய்தது. இந்த செய்திகளில் பைசாபாத் – அயோத்யாவிற்கு அனுப்பப்பட்ட 2800 மற்றும் 1900 கரசேவகர்கள் செல்லும் வழியெல்லாம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் வரும் சமயத்தில் கரசேவகர் களால் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப் படுவது தொடர்பாக...

மதவெறிகளைக் கடந்த மனித உறவுகள்

மதவெறிகளைக் கடந்த மனித உறவுகள்

குஜராத் கலவரத்தின்போது தன்னைக் கொலை செய்ய கத்தியுடன் வந்தவரைப் பார்த்து கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டு மன்றாடும், கலவரப் படம், மனசாட்சியை உலுக்கிப் போட்டது. அப்படி, உயிருக்கு மன்றாடியவர் குத்புதின் அன்சாரி – தையல் கடை நடத்திய ஒரு இஸ்லாமியர். மத வெறியுடன் கத்தியை தூக்கிக் கொண்டு வந்தவர் அசோக் மோச்சி – செருப்பு தைக்கும் தொழிலாளி. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் நட்புடன் அன்பைப் பரிமாறிக் கொண்ட நிகழ்வு, கேரள மாநிலம் கண்ணூரில் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இது. குத்புதீன் – குஜராத்திலிருந்து இடம் பெயர்ந்து, மேற்கு வங்கத்தில் குடியேறிவிட்டார். நிகழ்ச்சியில் பேசிய குத்புதீன், “குஜராத்தில் மதவெறி தற்காலிகமாக அடக்கப்பட்டுள்ளது. இது மோடியை டெல்லிக்கு வழியனுப்பி வைப் பதற்குத்தான். என்னைக் கொலை செய்ய வந்த அசோக் மோச்சி மீது எனக்கு பகை இல்லை. அன்பு மட்டுமே உள்ளது. இவர்களை மோடி, தனது...

காந்தி தேசத்தில் மோடியின் ‘தீண்டாமை’

காந்தி தேசத்தில் மோடியின் ‘தீண்டாமை’

குஜராத்தில் ‘நவஸ்ராஜன்’ என்ற சமூகத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் மார்ட்டின் மக்வான். 2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் அய்.நா.வின் இன வெறி எதிர்ப்பு மாநாடு நடந்தது. ஜாதிப் பாகுபாட்டையும் இனப் பாகுபாடாக அய்.நா. ஏற்கக் கோரி இந்தியாவிலிருந்து பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் வலியுறுத்தி, அதற்கு ஆதரவாக உலக நாடுகளில் கருத்துகளை உருவாக்கின. இந்தியாவிலிருந்து பங்கேற்கச் சென்ற மனித உரிமை அமைப்புகளின் கூட்டியக்கத்துக்கு தலை வராக செயல்பட்டவர் மார்ட்டின் மக்வான். குஜராத்தில் மனித மலத்தை கைகளாலேயே ‘தீண்டப் படாத’ மக்கள் துடைத்துக் கழுவும் அவலத்தை பட மாக்கி, அவர் சர்வதேச பிரதிநிதிகளிடம் போட்டுக் காட்டியபோது – அது அதிர்ச்சி அலைகளை உருவாக்கிற்று. கடந்த 2007 ஆம் ஆண்டு குஜராத்தில் நிலவும் மிக மோசமான தீண்டாமை கொடுமைகள் பற்றி விரிவான ஆய்வு ஒன்றை மக்வான் மேற் கொண்டார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய...

பீகாரை ஆட்டிப் படைத்த பார்ப்பனியம் லல்லு பிரசாத் கொந்தளிப்புப் பேட்டி

பீகாரை ஆட்டிப் படைத்த பார்ப்பனியம் லல்லு பிரசாத் கொந்தளிப்புப் பேட்டி

‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, பீகார் குறித்து ஒளிபரப்பிய ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பீகார் மாநிலத்தை பார்ப்பனர்கள் ஆட்டிப் படைத்த கொடூரமான வரலாறுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த நிகழ்வில் பேட்டி அளித்த லல்லு பிரசாத், பார்ப்பனக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தாம் அரசியலுக்கு வந்ததாக கூறினார். அந்த சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தித் தொகுப்பு. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை மாட்டுக்குப் பதிலாக கழுத்தில் ஏர் பூட்டிக் கொடுமைப்படுத்திய பார்ப்பன உயர் ஜாதிக் கூட்டம், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக்கான குரலைக் கொடுக்க ஆரம்பித்த நிலையில், அதற்காக எங்கள் ஆட்சிச் சக்கரம் சுழன்ற நிலையில், எங்கள் ஆட்சியைக் காட்டாட்சி (ஜங்கள்ராஜ்) என்று வருணிக்கிறார் – ஆனால், மோடியோ உயர்ஜாதி யினருக்கான கருவி என்றார் லாலுபிரசாத். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு வடக்கே மகாராஷ்டிரம், பஞ்சாப், மேற்குவங்கம் தவிர்த்த அனைத்து மாநிலங்களும் பார்ப்பனீய கட்டுக்குள் சென்றுவிட்டன. மகாராஷ்டிரத்தை எடுத்துக் கொண்டால் சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா...