Tagged: கிருஷ்ணகிரி திவிக

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 09112016

திருப்பூர் துரைசாமி மாநில பொருளாளர் ரத்தினசாமி மாநில அமைப்புச் செயலாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது கலந்து கொண்டவர்கள் சூலூர் பன்னிர் செல்வம். தி.குமார் தலைவர் கிருட்டிணகிரி மாவட்டம் செயலாளர் காகுமார் அலேசீபம் இல்லத்தில் நடைபெற்றது துணைச் செயலாளர் ப வஞ்சிநாதன் சங்கர் அனுமந்தப்பா.இராஜேஷ் பிரபு மற்றும் 20 பேர் கலந்து கொண்டனர் டிசம்பர் 24 தஞ்சை நிகழ்வு கட்டமைவு நிதி . முழக்கம் சந்தா அமைப்பு செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது கா.குமார் நன்றி யுரை 2.00 முடிந்தது

தூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை செப்.17இல் இல்லம் தேடி சந்திப்பு

தூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை செப்.17இல் இல்லம் தேடி சந்திப்பு

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் 17.9.2015 அன்று தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட கழகச் சார்பில் ஒரு நாள் முழுவதும் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பு என்றும், மாலை குடும்ப விழாவாகவும் கொண்டாடப் பட்டது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆலோசனைப்படி, இவ்விழாவினை கடந்த ஆண்டு 17.9.2014 அன்று தூத்துக்குடி பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று, பாவூர் சத்திரம் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை தோழர்கள், ஆதரவாளர்கள் சந்திப்பாக நடத்த திட்டமிட்டு, முதல் நிகழ்வாக, கீழப்பாவூர் பெரியார் திடலிலுள்ள பெரியார் சிலைக்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா மாலை யணிவித்ததோடு தொடங்கியது. தோழர்கள் இரு சக்கர வண்டியில் கொடிகளை கட்டிக் கொண்டும் கார்களிலும் அணிவகுத்து வந்தது பொது மக்களை பெரிதும் கவர்ந்தது. தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்து கழக...