Tagged: கிரிராஜ் சிங்

மோடி: சிறப்பு வினா-விடை

மோடி: சிறப்பு வினா-விடை

ரஜினிகாந்தின் அருணாச்சலம் படத்தில் ஒரு காட்சியில் நடித்த குரங்கு மரணம். ரஜினி ரசிகர்கள் இறுதி மரியாதை.   – செய்தி அச்சச்சோ… முக்கிய சாவு ஆச்சே; மோடிக்கு சேதி சொல்லியாச்சா? அரசியல் நோக்கத்தோடு மோடியை நான் சந்திக்கவில்லை.      – நடிகர் விஜய் அது எங்களுக்கும் தெரியுமுங்க… ரசிகர் மன்றத்தை இவ்வளவு பலமா, எப்படி உருவாக்கினீங்கன்னு மோடி கிட்ட ஆலோசனை கேட்கத்தான், போயிருப்பீங்க… அப்படித்தானே? தமிழகத்தைச் சார்ந்த ஒரு பெண்தான் தமிழ்நாட் டுக்கும், நாடு முழுமைக்கும் வரவேண்டிய திட்டங் களை முடக்கினார்.    – ஈரோட்டில் மோடி யாருங்க, அந்தப் பெண்? பெண்கள் பிரச்சினை என்றாலே, மோடி எப்போதும் புதிர் போடுவதே வழக்கமாயிடுச்சு! மோடியை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும்.        – பீகார் பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங் மோடிக்குத்தான் ‘விசா’ கிடைக்காது; மக்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. சோனியாவும் ராகுலும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் நாட்டை ஆள்கிறார்கள்.   – மோடி குற்றச்சாட்டு...