Tagged: காஷ்மீர்

சாகடிக்கப்பட்ட 370ஆவது பிரிவு

370ஆவது பிரிவை சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் வேலை திட்டமிட்டே நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர்  இணைப்பு ஆவணத்தின்படி தற்காப்பு,  அயலுறவு மற்றும் தகவல் தொடர்பு குறித்த  அம்சங்களில்தான் காஷ்மீருக்குப் பொருந்தும் வகையில் இந்தியப் பாராளுமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்கு மேல் மாநில அரசாங்கத்தின் (அதாவது மாநில சட்டமன்றத்தில்) ஒப்புதலுடன் பிற அம்சங்கள் குறித்து சட்டமியற்றுவதற்கு ஜனாதிபதி உத்தரவிடலாம் என்றும் அப்பிரிவில் கூறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த  இராஜேந்திர பிரசாத், பிரதமர் நேருவுக்கு 1949 மே 18-ந் தேதியன்று குறிப்பு ஒன்றை  அனுப்பியிருந்தார். “காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட்ட பிறகு இந்தப் பிரிவைப் பயன் படுத்தி மத்திய அரசு மற்றும் – காஷ்மீர் மாநில அரசு உறவுகளைப் பற்றி முதலும் கடைசியுமாக முடிவு செய்யலாம். ஆனால்,  370ஆவது பிரிவு வழங்கியுள்ள அசாதாரணமான அதிகாரங்களை மீண்டும்  மீண்டும் பயன்படுத்துவதற்கு குடியரசுத் தலைவருக்கும் அதிகாரம் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். (ஆதாம்: ஏ.ஜி. நூரணி, தி ஸ்டேட் ஸ்மன் 16.6.1992). ஆனால்...

கழகம் உள்ளிட்ட இயக்கங்களின் கூட்டறிக்கை காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறட்டும்!

திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சிபி.எம்.எல் (மக்கள் விடுதலை) கூட்டறிக்கை: மீண்டும் காஷ்மீர் பற்றி எரிய தொடங்கி விட்டது. அந்த பனிப் பிரதேசத்திற்குள் கனன்று கொண்டிருக்கும் எரிமலையை இந்திய அரசால் எந்த கானல் நீரைக் கொண்டும் அணைக்க முடியவில்லை.  2008, 2009, 2010 ஐ தொடர்ந்து 2016 இல் மீண்டும் கல்லெறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிரு க்கிறார்கள் காஷ்மீரத்து மக்கள். கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, அனந்தநாக் மாவட்டத்தில், ஹிஜ்புல் முஹாஜீதின் இளம் தளபதி புர்ஹான் வானி                            (வயது 22), “மோதல்” என்ற பெயரில் இந்திய  இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன்தான் புர்ஹான் வானி. ’பயங்கரவாதி’ என்று இந்திய அரசு சித்தரிக்க...

வரலாற்றுச் “சிரிப்பு” மிக்க வாக்குறுதி… பாமரன்

காஷ்மீரிகளின் தனித்துவம்….. படிக்க ஒருவேளை உங்களில் சிலருக்கு சலிப்பு வரலாம்…. என்னடா இப்பத்தான் இவன் 1947 க்கே வந்திருக்கான்….. எப்ப இவன் 2010 க்கு வர்றது? நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது? என்று எரிச்சல் கூட வரலாம். ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு வாரங்களுக்கு வாசிக்கவே நமக்குள் இத்தனை சலிப்பு என்றால் நானூறு…. ஐநூறு ஆண்டுகளாய் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இருக்கும்? ஆனால் அதிசயத்தக்க வகையில் அப்படி எதுவும் இல்லாமல் இன்னமும் அயராது போராடிக் கொண்டிருப்பதுதான் காஷ்மீர மக்களின் தனித்துவம். இனி தொடர்வோம்….. ”காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது. அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல...

காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் – பாமரன்

அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன? இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்….. ஆயிரக்கணக்கான கட்டுரைகள்…… மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்…. என எண்ணற்ற ஆதாரங்களை கரைத்துக் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை…. குறைந்தபட்சம் அதில் கால்பங்காவது கவனத்தில் கொள்ள வேண்டுமே.? ஏனெனில் இதனை எழுத முற்படுவது எனது கட்டுரைகளில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டும் என்பதைக் காட்டிலும்….. ரத்தம் சிந்த போராடிக் கொண்டிருக்கும் எவரையும் தப்பித்தவறிக் கூட தவறுதலாகக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் எனது தயக்கம். அந்த அச்சம்தான் என்னை இவ்வளவு நாளும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது. “ராணுவத்தின் மீதே கலவரக்காரர்கள் கல்லெரிகிறார்கள்.” “அமைதியை நிலை நாட்ட வேறு வழியின்றி ராணுவம் துப்பாக்கிச் சூடு” “பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்” என அன்றாட தலைப்புச் செய்திகளை மட்டும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நாமும் ஓய்வெடுக்கலாம்தான். ஆனால் இதுவெல்லாம் அப்படியே நூற்றுக்கு...