Tagged: காவிரி நதிநீர்

அய்யகோ! விக்னேசு இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா?

விக்னேஷ் என்ற 21 வயது இளைஞர் தீக்குளித்து, உயிர்க் கொடை வழங்கிவிட்டார். நெஞ்சம் பதறுகிறது. நாம் தமிழர் கட்சி, காவிரி உரிமைக்காக கருநாடக அரசைக் கண்டித்து நடத்திய பேரணியில் விக்னேசு இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்து விட்டார். தனது முகநூலில் பேரணிக்கு முதல் நாளே ‘தீக்குளிப்பு நடக்கப் போகிறது’ என்று சூசகமாக அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் சமூகத்தைப் பற்றி கவலைப்படுகிற இளைஞர்கள் வெகு சிலர்தான். உல்லாசம், பொழுது போக்கு, கேளிக்கை என்று வாழும் இளைஞர்களிடையே அதிசயமாக இன உணர்வோடு இனத்தின் விடுதலைக்காகப் போராட வரும் இத்தகைய இளைஞர்கள் இப்படி தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் விபரீத முடிவுகளை ஏன் எடுக்க வேண்டும்? உணர்ச்சிகரமான பேச்சுகளும் அதற்காக கட்டமைக்கப்படும் சொல்லாடல்களும் இளைஞர்களை வெற்று உணர்ச்சிக்குள் மூழ்கச் செய்து  விடுகின்றன. தெளிந்த சமூக அரசியல் பார்வை; அதற்கான போராட்டப் பாதை; இதை முன்னெடுப்பதற்கான களச் சூழல் இவைகளோடு பொருத்திக் கொண்டு தொடர்ந்து செயலாற்றுவதற்கான  உறுதியை உணர்வுகளாக்கிக் கொள்ள...