Tagged: கால்பந்தாட்ட போட்டி

கால் பந்தாட்டப் போட்டி – தெருமுனைக் கூட்டங்களுடன் மயிலையில் 4 நாள் பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

சென்னையில் மயிலாப்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் பெரியார் பிறந்த நாள் விழாவை கால்பந்து போட்டிகளோடு இணைத்து நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். கடந்த செப். 26ஆம் தேதி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் விழா, அறிவியல் பரப்பும் மூடநம்பிக்கை எதிர்ப்பு கலை நிகழ்ச்சிகளுடன் விழா எழுச்சியுடன் நடந்தது. இது குறித்த செய்தி: சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் , துடிப்பாக செயல்படக்கூடிய இளைஞர்களைக் கொண்ட அமைப்பு, கழகப் போராட்டங்களிலும், களப்பணிகளிலும் முன்னணியில் நிற்கும் தோழர்கள், பெரியார் பிறந்த நாளையொட்டி பார்ப்பனரல்லாத இளைஞர்களின் விளையாட்டாகத் திகழும் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான போட்டி, கடந்த செப்.25ஆம் தேதி இராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாநகராட்சி மைதானத்தில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மோகன கிருட்டிணன் தொடங்கி வைத்தார். 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. அம்பேத்கர் பெயரில் இயங்கும் அணி...