தமிழ் மொழியில் ஊடுருவி நிற்கும் ஆண் ஆதிக்கம்
தமிழ் இலக்கியங்கள் மீது பெரியார் வைத்த விமர்சனங்களுக்கான காரணங் களில் ஒன்று அதில் அடங்கியுள்ள ஆணாதிக்க கருத்துகள் தான், பெண் களுக்கு ‘விதவை’ என்ற சொல் லிருக்கும் போது ஆண்களுக்கு ‘விதவன்’ என்ற சொல் ஏன் இல்லை என்று கேட்டார் பெரியார். தமிழ் மொழி சொற்கள் பயன்பாட்டில் ஆண் ஆதிக்கத்தை சுட்டிக் காட்டுகிறது இந்தக் கட்டுரை. ‘கவிஞன் என்பவன்’, ‘எழுத்தாளன் என்பவன்’, ‘நடிகன் என்பவன்’, ‘உழைப்பாளி என்பவன்’, ‘புரட்சி யாளன் என்பவன்’ என்றெல்லாம் தொடங்கும் ஏராளமான வாக்கியங் களை நமது அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் தினசரி நாம் எதிர்கொண்டுவருகிறோம். இந்த வாக்கியங்களை ஒரு பெண் படிக்கும் போது அவருக்கு என்ன தோன்றும்? ‘ஓஹோ, கவிதை, எழுத்து, நடிப்பு, உழைப்பு, புரட்சி என்று அனைத்தும் ஆண்களால்தான் செய்யப்படு கின்றனவோ?’ என்ற கேள்விதானே எழும். இதெல்லாம் பரவாயில்லை. இந்த வாக்கியங்களைவிட அதிகமாக நாம் தினசரி எதிர்கொள்வது, ‘மனிதன் என்பவன்’, ‘மனிதன் இருக்கின்றானே’ ரீதியிலான...