பணமாற்றம் செய்ய ‘க்யூ’ வரிசைக்கு பெரும்புள்ளிகள் வராதது ஏன்?
இனிப்போ, கசப்போ அதன் பெயர் மருந்து. அதையும் அருந்தச் சொல்வது அரசன் என்கிறபோது மக்கள் ஏற்கத்தான் வேண்டும். பழைய ஆயிரமும், ஐந்நூறும் செல்லாது என்ற ‘அரச’ அறிவிப்புக்கு இதுதான் இப்போதைய சமாதானமாக இருக்க முடியும். ஆனால், ஒட்டு மொத்த மக்களும் இந்த மருந்தை ஒன்றே போல்தான் சுவைக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. பெரும்பாலான நடுத்தர, ஏழை மக்கள் நவம்பர் 9ஆம் தேதி இரவு ஒன்பது மணியிலிருந்து வங்கிகளின் வாசலில் நின்றுகொண்டுதான் இருக் கின்றனர். அனைவரின் கைகளிலும் 5 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரை யில், அவ்வளவும் பழைய ரூபாய் நோட்டுகள். பணம் இருக்கிறவர்கள், வங்கிப் பக்கம் தென்படவே இல்லை. அரசியல்வாதிகளோ, தொழில் அதிபர் களோ, சினிமா நட்சத்திரங்களோ வங்கி வரிசையில் காணவில்லை. அவர்களிடம் இருக்கிற பணத்தை யார் மாற்றுகிறார்கள் என்பதுதான் பிரதான கேள்வியாக இப்போது எழுந்துள்ளது. பண மாற்றத்துக்கு முக்கிய மேலிடத்தை அணுகும் வி.ஜ.பி.க் களிடம், அதிகார மைய ஆட்கள், “இதில்...