கமலஹாசனின் “சபாஷ் நாயுடு”
நடிகர் கமலஹாசன் தன்னை பெரியாரிஸ்ட், கடவுள் மறுப்பாளராக அடையாளப்படுத்தி வருகிறார். மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் திரைப்பட உலகில் புகழ் பெற்ற நடிகர்கள் இப்படி பெரியார் கொள்கையோடு தங்களை இணைத்துக் கொள்ள முன் வருவது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதுதான். ஆனால், சமூக நீதிக் கொள்கையில் அவர்கள் வேறுபடுகிறார்கள். குறிப்பாக இடஒதுக்கீட்டுக்கு எதிராக கமலஹாசன் கருத்துகளைத் தெரிவிக்கிறார். பெரியாரின் கடவுள் மறுப்பு கோட்பாடு, சமூக நீதியையும், பார்ப்பனிய சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புகளையும் உள்ளடக்கமாகக் கொண்டதாகும். மக்கள் விடுதலைக்கான சமூகநீதியைக் கொண்டதே பெரியார் பேசிய நாத்திகம். இது கமலஹாசன் பேசும் நாத்திகத்திலிருந்து மாறுபட்டது. இப்போது கமலஹாசன் தான் தயாரிக்கப் போகும் படத்துக்கு ‘சபாஷ் நாயுடு’ என்ற பெயரை சூட்டியிருப்பது விவாதங்களை கிளம்பியிருக்கிறது. படத்தின் பெயரோடு ஏன் ஜாதியை இணைக்க வேண்டும்? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகின்றன. ‘படத்தின் கருத்தைப் பாருங்கள். தலைப்பை பார்க்காதீர்கள்’ என்று பதில் கூறுகிறார் கமலஹாசன். இப்படிப்பட்ட விவாதங்களை உருவாக்குவதேகூட...