Tagged: கன்யாகுமார்

பிரிட்டனில் பார்ப்பனர்கள் திணிக்கும் தீண்டாமைக்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டனில் பார்ப்பனர்கள் திணிக்கும் தீண்டாமைக்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டனில் குடியேறிய பார்ப்பன உயர் ஜாதி இந்துக்கள், அங்கும் ஜாதியையும் தீண்டாமையையும் பின்பற்றி வரும் அவலம் நீடிக்கிறது. கடந்த மார்ச் 2 ஆம் தேதி இலண்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் களிடையே நிலவும் ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. தெற்காசிய ஒற்றுமைக் குழு ‘ஜாதிய கண்காணிப்பு மய்யம்’ தெற்காசிய புலம் பெயர் சமூகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த கருத்தரங்கினை நடத்தின. பிரிட்டனில் ‘ஜாதிய கண்காணிப்பகம்’ என்ற ஜாதிக்கு எதிரான அமைப்பு அங்கே இப்போதும் ‘இந்து’, ‘சீக்கியர்’ சமூகங்களில் பின்பற்றப்பட்டு வரும் ஜாதி தீண்டாமை பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. 2010ஆம் ஆண்டில் பிரிட்டனில் நிறவெறி பாகுபாடு களுக்கு எதிராக ‘சமத்துவ சட்டம்’ ஒன்றை அந்நாடு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தில் ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான பிரிவையும் இணைக்க வேண்டும் என்று பிரிட் டனில் இந்தியாவிலிருந்து குடியேறிய ஜாதி எதிர்ப்பாளர்கள் – தொடர் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தினர்....

தேச பக்தியைக் காக்க ‘இரும்புத் தடி-124ஏ’

தேச பக்தர்கள், தேச பக்தியைக் காப்பாற்ற இரண்டு ஆயுதங்களைத் தூக்கி இருக்கிறார்கள். ஒன்று இரும்புத் தடி; மற்றொன்று தேசத் துரோக சட்டம்! திலீபன் மகேந்திரன் என்ற த.பெ.தி.க.வைச் சார்ந்த இளைஞர், தனது முகநூலில் தேசியக் கொடியை எரிப்பது போல் ஒரு படத்தை வெளியிட்டாராம். அவர் பொது இடத்தில் அதைச் செய்ய வில்லை. ‘இந்திய தேசியத்தின்’ துரோகத்துக்கு தனது எதிர்ப்பாக வெளியிட்ட ஒரு போராட்ட வடிவம் அவ்வளவுதான்! உடனே ‘தேச பக்தி’ பீறிட்டுக் கிளம்பிய சென்னை புளியந் தோப்பு காவல்துறை, தேசபக்திக்காக இரும்புத் தடியை தூக்கியது. அந்த இளைஞரின் கை விரல்களை உடைத்து, ‘தேச பக்தி’யையும் சட்டத்தை மதிக்கும் தனது ‘மாண்பையும்’ கேவலமாக வெளிப்படுத்தியது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், ‘தேசபக்தி’யைக் காப்பாற்ற கன்யாகுமார் என்ற பீகாரைச் சார்ந்த மாணவனை ‘தேசத் துரோக’ வழக்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவின் கீழ் கைது செய்திருக் கிறார்கள். அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட...