Tagged: கன்னியாகுமரி திவிக

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா குமரியில்

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் சார்பாக தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் குடும்ப விழாவாக கழக தோழர்  தமிழ் மதி,இல்லம் குன்னம்பாறையில் 15-01-2016.வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு நடைப்பெற்றது. கழக தோழர்கள், ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பொங்கல்  வைத்து சாப்பிட்டனர். பின்பு நடைப்பெற்ற கலந்துரையாடல் தோழர் சஜீவ் தலைமையுரையுடன் துவங்கியது.கழக தோழர் தமிழ் மதி வரவேற்று பொங்கல் தமிழ்புத்தாண்டு பற்றி விளக்கி பேசினார். தோழர்.சூசையப்பா வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள் பரிணாம வளர்ச்சி, நாத்திகம், மூடநம்பிக்கைகள், பற்றி கருத்துரையாற்றினார்கள். பின்பு சிற்றுண்டியுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் பிரிந்து சென்றனர்.