ரோகித் வெமுலா மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
அய்தராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ‘ரோகித் வெமுலா’ – பல்கலையின் பார்ப்பன ஜாதிப் புறக்கணிப்புக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார். இது நிறுவனம் நடத்திய படுகொலை. இந்த சாவுக்குக் காரணமான மத்திய அமைச்சர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கழக சார்பில் பிப்ரவரி முதல் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதேபோல் தமிழகத்தில் கோரத்தாண்டவ மாடும் தீண்டாமைக் குற்றங்களைக் கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்த செய்தித் தொகுப்பு: சென்னை : சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே பிற்பகல் 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி 6.30 வரை நீடித்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எஸ்.டி.பி.அய். தலைவர் தேஹலான் பாகவி, வாலாஜா வல்லவன் (மா.பெ.பொ.க.), குமரன் (த.பெ.தி.க.), வே.மதிமாறன் (எழுத்தாளர்), செந்தில் (இளந் தமிழகம்), கவின்மலர் (ஊடகவியலாளர்), வழக்கறிஞர்கள்...