கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்
‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (செப்.22) மராட்டியத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுப் போராளி தபோல்கர் நினைவாக பேராசிரியர் வசந்த் நடராசன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். மனித சமுதாய வரலாற்றைப் படித்தால் மற்ற எந்த காரணத்தையும்விட மதத்தின் பேரால் நடந்த போர்களே அதிகம் என்பதைப் பார்க்க முடிகிறது. சரியாகச் சொன்னால், எந்ததெந்தக் காலகட்டங்களில் மதமும் அதன் மீதான கொள்கைப் பிடிவாதமும் தீவிரமாகக் கோலோச்சினவோ அந்தக் கால கட்டங்களில்தான் மனிதர்கள் மீது மிகக் குரூரமான சித்திரவதைகளும் நடைபெற்றன. உதாரணமாக, கத்தோலிக்க சர்ச்சோடு உடன்படாதவர்களைக் கொடுமைப்படுத்திய ஸ் பானிய விசாரணைகள் நடைபெற்ற காலத்தைக் கூறலாம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராகத் தொடங்கி வளர்ந்த நாசிசம் இரண்டாம் உலகப் போரில் போய் முடிந்தது. இப்போது ‘இஸ் லாமிய தீவிரவாதம்’ தலை தூக்கியிருப்பது, சிலர் குறிப்பிடுவதுபோல் வெவ் வேறு கலாச்சாரங்களுக்கு இடையே நடக்கும் மோதல் அல்ல. இஸ் லாம் மதத்துக்கும், கிறிஸ் துவ மதத்துக்கும் இடையிலான மோதல்தான். அதன்...