Tagged: ஒத்துழையாமை இயக்கம்

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ்.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி) தேச விரோதிகள், அரசியல் சட்டத்தை மதிக்காதவர்கள் என்று கூக்குரல் போடுவோர், எத்தகைய ‘தேசபக்தர்கள்’? நாம் கேட்பது, “நீங்கள் கூறும் தேசபக்தியின் அளவுகோலை உங்களுக்கே பொருத்திப் பாருங்கள்” என்பது தான். சட்டங்களையோ, அரசு அமைப்பையோ விமர்சித்துப் பேசுவதே ‘தேசவிரோதம்’ என்றால், சங்பரிவாரங்களே! உங்களின் வரலாறு என்ன என்பதுதான் நமது கேள்வி! இந்திய அரசியல் சட்டம் குறித்து 1993ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஆர்.எஸ்.எஸ். ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அந்த வெள்ளை அறிக்கை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்று கூறுகிறது. இவர்கள்தான், இப்போது அம்பேத்கரையும் தங்கள் ‘இந்துத்துவ’ அணியில் இழுத்துக் கொண்டு தலித் மக்களை ஏமாற்றலாம்...