ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாதங்கள்: சரியானது தானா?
தென்தமிழகத்தில் அதிக எண்ணிக்கை யில் இருக்கும் ஆதிக்க ஜாதியினரான முக்குலத்தோரின் விளையாட்டுதான் ஜல்லிக் கட்டு, இது ஒட்டுமொத்த தமிழர்களின் விளையாட்டுகள் அல்ல என்று பெரியாரிய வாதிகள் சொன்னபோது, தமிழ்த் தேசிய வாதிகள் அதை மறுத்தார்கள். ஆனால், உண்மை என்னவென்பதை ஜல்லிக்கட்டு நடத்துபவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். 09.01.2017 அன்று நியூஸ் 18 தொலைக் காட்சியில் நடந்த விவாதத்தில் அம்பேத்கரிய லாளர் அன்பு செல்வம் பேசும்போது – “1996இல் தென் தமிழகத்தில் ஜாதிக் கலவரங்கள் அதிகமாக நடைபெற்றபோது, அதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மோகன் கமிஷன், ‘ஜாதிக் கலவரங்களுக்கான காரணிகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று’ எனக் கூறியது என்றும், ஜல்லிக்கட்டுக்குப் பின்புலத் தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் அதிகார அரசியல் இருக்கிறது என்றும், இது தொடர்ச்சியாக தலித் மக்களின் மீது வன் கொடுமைகளை கட்டவிழ்த்துக் கொண்டிருக் கிறது என்றும் குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளித்த ஜல்லிக்கட்டு மீட்புக் குழுவின் உறுப்பினர் இராஜேஷ், 1996இல் ஜாதிக் கலவரம் ஏற்படுவதற்கு...