Tagged: ஊதுவத்தியின் ஆபத்து

சோதிடத்தைப் பற்றிஆச்சாரியார்!

சோதிடத்தைப் பற்றிஆச்சாரியார்!

ஜோதிடத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று  இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி)  கூறியிருக்கிறார்.  அவர் மேற்கு வங்க முதல் ஆளுநராக இருந்தபோது  அஜந்தாவுக்கும் எல்லோராவுக்கும் போகும் வழியில் அவுரங்காபாத்தில் வரவேற்பொன்று அளித்தனர். வரவேற்புரையில் அவரை அளவுக்கு மீறி வரம்பின்றிப் புகழ்ந்து வைத்தனர். இராஜாஜியின் முழுப் பெயரில் உள்ள எழுத்துக்களைக் கூட்டி, அதை வைத்து, ‘எண் சோதிடம்’ கூறுவதாக அவரை ஒரேயடியாக புகழ்ந்து  நல்ல பலன்களாகவே கூறினர். இவைகளுக்கு இராஜாஜி பதிலளித்துப் பேசுகையில், “உண்மையைக் கூற வேண்டுமானால், நான் ஜோதிடத்தை நம்புவதில்லை; எனக்கு அதில்  நம்பிக்கை இல்லை; அதை நம்பக் கூடாது என்று  உங்களையும் நான் எச்சரிக்கிறேன். ஜோதிடத்தில் அப்படியே ஏதாவது இருந்தாலும் அதை  நட்சத்திரங்களைக் கொண்டு எதிர்காலத்தை அறிவதாகக் கூறுவது சிறிதுகூட அறிவுடைமையாகாது. மாலையை அணிவித்து வரவேற்புரையும் கூறினீர்கள். இவற்றில் மாலையைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், அதை நான் என் கழுத்திலிருந்து எடுத்துவிட முடியும்; நீங்கள் கூறிய புகழுரைகள் என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன”  என்றார். (இராஜாஜியின் இராணுவச் செயலாளராக ...