ஜாதிகளை கடந்து மாற்றப்படும் உறுப்புகள்
தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு 30 உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை கள் மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனை களுடன் ஆலோசித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். மூளைச் சாவு : தமிழ்நாட்டில், ‘மூளைச் சாவு அடைந்தோர் உடலுறுப்பு கொடைத் திட்டம்’ 2008, அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கிய பின் உடலுறுப்புகள் கொடை பெற்று பிற நோயாளிகளுக்குப் பொருத்தப் படுகின்றன. மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், இருதய வால்வுகள், கண்கள், தோல், இரத்தக் குழாய்கள் ஆகிய 10 உறுப்புகளை கொடையாகப் பெற முடியும். தமிழகத்தில் இதுவரை மூளைச்சாவு அடைந்த 676 பேர் தங்கள் உடலுறுப்புகளை கொடை அளித் துள்ளனர். தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு மூளைச் சாவு அடைந்த 15 முதல் 20 பேரின் உடலுறுப்புகளை அவர்களது உறவினர்கள் கொடையளிக்கின்றனர். ஆனால், மூளைச் சாவு...