Tagged: உமாபாரதி

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

பொற் கோயிலுக்குள் இராணுவம் நுழைந்து 700 பேர் வரைக் கொன்றுக் குவித்த 30 ஆம் நினைவு நாளன்று பொற்கோயிலில் இரு சீக்கிய பிரிவினர், வாள், ஈட்டியுடன் மோதிக் கொண்டனர்.              – செய்தி இப்படித்தான் அன்றைக்கு இராணுவம் நுழைந்த போதும் நடந்தது என்பதை செயல்முறையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் போல! கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம்; 4 அமைச்சர்களிடம் மோடி ஒப்படைத்தார்.  – செய்தி முதலில் ‘பாவம்’ செய்த பக்தர்கள் ‘பாவத்தை’ கங்கையில் தொலைப்பதற்கு தடை போடுங்க! அதுவரை கங்கை “பாவங்களின்” நதியாகத்தான் இருக்கும்; தூய்மையாகாது. போரில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த ராஜபக்சே நியமித்துள்ள விசாரணைக் குழுவிடம், 18,590 புகார் மனுக்கள் வந்துள்ளன.      – செய்தி அப்புறம், இந்த மனுக்களும் காணாமல் போகும்; அதைக் கண்டுபிடிக்க ராஜபக்சே மற்றொரு குழு போடுவார். இந்திய வெளியுறவுத் துறை அதையும் வரவேற்று அறிக்கை விடும். அட, போங்கப்பா! “கற்பழிப்பு” குற்றவாளிகளை கடவுளால் மட்டுமே தடுக்க...