மனித உறுப்புகளை கூறு போட்ட ‘மனுதர்ம’த்துக்கு மாணவி தந்த மரண அடி
உலகத்தைப் “படைத்த” பிர்மா, தனது தலையிலிருந்து ‘பிராமணனை’யும், தோளிலிருந்து ‘சத்திரியனை’யும், தொடையிலிருந்து ‘வைசியனை’யும், காலிலிருந்து ‘சூத்திரனை’யும் படைத்ததாக ‘மனுசாஸ்திரம்’ கூறுகிறது. பிறப்பின் அடிப்படையிலே மனுதர்மம் கற்பித்த இந்த ஏற்றத் தாழ்வுகளை, சாதியமைப்பு உள்வாங்கிக் கொண்டது. சாதியமைப்பு, ‘மனு சாஸ்திரத்தை’ அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகிறது. இதன் காரணமாகவே சாதிப் பிளவுகள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. சாதி மாறி திருமணம் செய்து விட்டால், சாதிச் சமூகமும், சாதிக் குடும்பமும் துள்ளிக் குதிக்கின்றன. வாழத் தகுதியற்றவர்களாக்கி, மரண தண்டனை வழங்கவும் குடும்பத்தினரே முற்படுகின்றனர். ‘பிர்மா’ தனது உடலையே ‘தலை’, ‘தோள்’, ‘தொடை’, ‘கால்’களை ஏற்றத் தாழ்வுக்கு உள்ளாக்கிய இந்த சமூகக் கொடுமை, மனித உடலுக்குள்ளேயே கூறு போடும் இந்த ‘சமூக வக்கிரம்’ சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும். அதுவே ‘மனித நேயம்’ என்பதற்கு சான்றாக இப்போது ஒரு உள்ளத்தை நெகிழச் செய்யும் செய்தி வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் படித்த மாணவி சரண்யா, தனது...