Tagged: ஈழ உரிமை

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (3) வளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்கள் அருட்தந்தை ஆ. குழந்தை

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (3) வளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்கள் அருட்தந்தை ஆ. குழந்தை

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து, கள நிகழ்வுகளைக் கண்டறிந்து திரும்பி யுள்ளார் அருட்தந்தை ஆ. குழந்தை. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளை விளக்கி ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் துக்காக அவர் எழுதிய கட்டுரை இது. (சென்ற இதழ் தொடர்ச்சி) அடிப்படை வசதி பறிப்பு தமிழர்கள் வீடுகட்ட இலங்கை பணம் ஐந்தரை இலட்சம் அரசு கொடுக்கின்றது. ஆனால் வீட்டுக் கட்டுமான பொருட்களின் விலை அதைவிட இரண்டுமடங்கு அதிகமாக இருக்கின்னறன. காலோபிளாக்ஸ் கல்லை பயன்படுத்தி தட்டிகளை வைத்து வீடு கட்டுகின்றனர். மின் விளக்குகள் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இல்லை. (எ.டு.) ஒட்டுச் சுட்டான் பிரதேசத்தில் உள்ள முத்துஐயன், கட்டுக்குளம், கனகரத்தினபுரம், தட்டயமலை முத்துவிநாயகர்புரம் ஆகிய ஊர்களில் உள்ள 350 குடும்பங்கள் மின்சாரா வசதியின்றி குப்பி (மண்ணெய்) விளக்குகளை பயன்படுத்து கின்றனர். இராணுவ முகாம்களையும் நகரங் களையும் இணைக்கும் முக்கிய சாலைகளை மட்டும் சீனா போட்டுக்...