Tagged: இஸ்லாமிய கைதி

திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்தல் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!

திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்தல் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!

‘சேவ் தமிழ்’ அமைப்பின் சார்பில் சிறையில்நீண்ட காலம் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் நியாயமான விடுதலைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும், செப்டம்பர் முதல் தேதி சென்னை லயோலா கல்லூரி ‘பிஎட்’ அரங்கில் நடந்த கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். “தமிழ்நாட்டில் பெரியாரின் திராவிடர் இயக்கம், திராவிடர் என்ற குடையின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளான பார்ப்பனரல்லாதார், இஸ்லாமியர்கள், தலித் மக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒடுக்கும் சக்தியான பார்ப்பனர்களை தனிமைப்படுத்தி, இந்த மக்களின் விடுதலைக்கும், உரிமைக்குமான இயக்கத்தை முன்னெடுத்தார். அதன் விளைவாக ஏனைய வடமாநிலங்களில் மிக மோசமாக கட்டமைக்கப்பட்டதைப் போன்ற குறுகிய இஸ்லாமிய வெறுப்பு தமிழகத்தில், முளை விடும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. மதத்தால் வேறுபட்ட இஸ்லாமியர்களை திராவிடர்களாக, சகோதரர் களாக தமிழகம் அரவணைத்தது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவாக்கப்பட வேண்டிய இந்த ஒற்றுமையைக் குலைக்க பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் திட்டமிட்டு மேற்கொள்ளும்...