Tagged: இளம்பிள்ளை பிரச்சாரம்

கோபியில் பெரியார் இயக்கங்கள் – தமிழர் அமைப்புகள் இணைந்து பெரியார் விழா; இளம்பிள்ளையில் ஜாதி ஒழிப்பு பரப்புரை; சேலம்-கோவை மாவட்டங்களில் பெரியார் விழா கழகத்தின் எழுச்சிப் பணிகள்

கோபியில் பெரியார் இயக்கங்கள் – தமிழர் அமைப்புகள் இணைந்து பெரியார் விழா; இளம்பிள்ளையில் ஜாதி ஒழிப்பு பரப்புரை; சேலம்-கோவை மாவட்டங்களில் பெரியார் விழா கழகத்தின் எழுச்சிப் பணிகள்

கோபிசெட்டிபாளையம் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலம் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி எழுச்சியுடன் நடைபெற்றது. ஈரோடுமாவட்டம். கோபிசெட்டிபாளையம், தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக தமிழர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடிவருகின்றனர். இவ்வாண்டு தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழாவை திராவிடர் விடுதலைக்கழகம், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மதிமுக, வி.சி.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் ஒன்றிணைந்து தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணியாக வந்து பெரியார்திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன. பேரணி ல.கள்ளிப் பட்டியில் தொடங்கி கச்சேரிமேடு, எம்.ஜி.ஆர். சிலை, தினசரி மார்க்கெட் வீதி, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை வந்தடைந்தது. பேரணியின் போது பெரியாரின் கொள்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும்,...