Tagged: இராமாயணம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி இராமன் பாலம் கட்டுவதற்கு முன்பு – இங்கே இராவணன், சூர்ப்பனகை எப்படி வந்தார்கள்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி இராமன் பாலம் கட்டுவதற்கு முன்பு – இங்கே இராவணன், சூர்ப்பனகை எப்படி வந்தார்கள்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து: வால்மீகி இராமாயணத்தை சீனிவாச அய்யங்கார் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சி.ஆர். நரசிம்ம ஆச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்தார். அதில்… எண்பது மைல் அகலம், எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இராமன் பாலம் கட்டியதாகத்தான் வால்மீகி இராமாயணம் சொல்கிறது. இங்கிருந்து இலங்கைக்கு முப்பது மைல் தூரம் தான். எனவே எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இங்கு பாலம் கட்டியிருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் கூட இராமாயணப்படி இராமன் கட்டியது மிதக்கும் பாலம் தானே தவிர, நிலம் வரைக்கும் இருந்த பாலம் அல்ல. அது மட்டும் அல்லாமல் இராமாயணக் கதைப்படி இராமன் திரும்பி வந்தவுடன், இதன் வழியாக அரக்கர்கள் வந்துவிடுவார்கள் எனக் கருதி, அம்பு எய்தி பாலத்தை அழித்து விடுகிறான். நாம் வைக்கும் வாதங்கள் என்னவென்றால்…. சூர்ப்பனகை இங்கு வருகிறாள், அவள் தாக்கப்பட்ட...

திராவிடரை இழிவுப் படுத்தும் ‘இராம லீலா’ ‘இராமன்’ – நன்மையின் உருவமா? பெரியார்

திராவிடரை இழிவுப் படுத்தும் ‘இராம லீலா’ ‘இராமன்’ – நன்மையின் உருவமா? பெரியார்

நன்மையின் உருவம் ‘இராமன்’; தீமையின் உருவம் ‘இராவணன்’ என்று கூறி, டெல்லி இராம் லீலா மைதானத்தில், இராவணன் உருவத்தை எரிக்கிறார்கள். இராமன் குறித்து பெரியார் எழுப்பும் இந்த கேள்விகள் இராமன் யோக்கியதையை உணர்த்தும். கைகேயியை மணம் செய்து கொள்ளும்போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்குச் ‘சுல்கமாக’க் கொடுத்து விட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும் இராமனுக்கு நன்றாய்த் தெரியும். நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும், கைகேயிக்கும், குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். பரதன் ஊரில் இல்லாத சமயத்தில் பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான். இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது செய்து கெடுத்து விடுவானோ என்று கருதி, இலட்சுமணனை ஏய்க்க, ‘இலட்சுமணா, உனக்காகத்தான் நான் முடிசூட்டிக் கொள்கிறேன்; நீதான் நாட்டை ஆளப் போகிறாய்’ என்று ‘தாஜா’ செய்கிறான். பட்டாபிஷேகம் நடக்குமோ, நடக்காதோ என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். ‘நாடு உனக்கு இல்லை;...

தடை மீறி 54 முறை கைதான புரட்சி நடிகர்

செப்.17, பெரியார் பிறந்த நாளில் தான் ‘நடிகவேள்’ இராதா முடிவெய்தினார். அவர் நினைவாக ‘மணா’ தொகுத்த ‘எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்’ நூலிலிருந்து -சில பகுதிகள்: நடிகவேள் எம்.ஆர்.இராதா, 1942க்குப் பிறகு மறுபடியும் நாடக மேடைக்கே திரும்பினார். பொன்னுச்சாமி பிள்ளை கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இழந்த காதல் நாடகத்தில் அவருடைய சவுக்கடிக் காட்சிக்குத் தனிப் பெயர் கிடைத்தது. சிவாஜி பெண் வேடத்தில் நடித்த இந்த நாடகம், வெள்ளித்திரை (திரைப்படம்) தரத் தவறிய புகழைத் தந்தது. அண்ணா உள்படப் பலர் பாராட்டினார்கள். பெரியாரும், சம்பத்தும் வந்து மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள். பெரியாருடன் தொடர்பு கூடியது. ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ என்கிற பெயருடன் இயங்க ஆரம்பித்தார் இராதா. “சுயமரியாதைக் கருத்துகளை நான் ஆராய ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே முழுவதும் அதன் வசமாகிவிட்டேன்” என்று இராதாவே உணர்வுடன் சொல்லு மளவுக்கு திராவிட இயக்கக் கருத்துக்கள் அவருடைய நாடகங்களில் வெளிப்பட்டன. விமலா அல்லது விதவையின் கண்ணீர் துவங்கி, இலட்சுமி காந்தன்,...

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

பிறந்த நாள்: 6.4.1927; பிறந்த இடம் : நாகப்பட்டினம்; தி.க.வில் சேர்ந்தபோது வயது 17. அப்போதிலிருந்து திருவாரூர் வாசம். ரத்தக் கண்ணீர் நாடகம் எழுதிய போது வயது 19. இளமையில் செய்யும் தவறுகள், முதுமையில் எப்படி வாட்டும் என்பதே கதைக் கரு. இராமாயண ஆராய்ச்சி செய்து, வால்மீகி இராமாயணம் தொடங்கி, வடமொழியிலுள்ள பல்வேறு இராமாயண கதைகளையும் ஆய்வு செய்து, மலையாள இராமாயணம், கம்பராமாயணம் உள்பட ஆய்ந்து தெளிந்து எழுதிய நூல் இராமாயணம். அரசாங்கம் இந்நூலை தடைசெய்தபோது எம்.ஆர்.இராதா ‘இராமாயணம்’ என்ற பெயரில் பட்டி தொட்டி எங்கும் இந்நாடகத்தை அரங்கேற்ற, பெரும் புரட்சி செய்த நாடகம் அது. இரத்தக் கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என்ற மூன்று படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதியவர். இவரது பெரிய புராண ஆராய்ச்சி நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து இவருடன் உரையாடி...

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பெரியார் கொள்கைகளை மேடைகளிலும் கலை வடிவங்களிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களிடம் கொண்டு செல்வதையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட திருவாரூர் தங்கராசு 5.1.2014 பிற்பகல் 3.45 மணியளவில் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழாமல் மரணத்தை சந்திக்கும் வரை வழமையாகவே இருந்தார். குடும்பத் துடன் உரையாடிக் கொண்டிருந்தவர், கழிப்பறைக்குச் சென்றார். அங்கேயே சாய்ந்துவிட்டார். அவரது மரணமும் சுயமரியாதையுடனேயே நிகழ்ந்துவிட்டது. 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அவரது இல்லத்திலிருந்து பெரியார் இயக்கத் தோழர்கள் அணி வகுப்புடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெசன்ட் நகரிலுள்ள மின் மயத்தில் உடல் வீரவணக்க முழக்கங்களுடன் எரி யூட்டப்பட்டது. முன்னதாக, ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அவரது இல்ல வாயிலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்....

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்டவர்கள் என்பதற்கு இராமாயணம், மகாபாரதத்திலேயே ஆதாரங்கள் உண்டு. மௌரியர் காலத்துக்குப் பின்பும், குப்தர் காலத்திலும் இலக்கிய வடிவம் தரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மகாபாரதம், இராமா யணம் ஆகியவை மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்துக்குத் தெளிவான ஆதாரங்களைத் தந்துள்ளன. (தொடக்கக்கால °மிருதிகளும், புராணங்களும் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவைதாம்). பொழுதுபோக்குக்கு என்பதை விட உணவுக்காக சத்திரியர்கள் அடிக்கடி வேட்டையாடி வந்திருக்கிறார்கள் என்பதற்கு மகாபாரதம் – குறிப்பாக அதிலுள்ள வனபர்வம் – ஆதாரமாக இருக்கிறது. உணவுக்காக வளர்ப்பு விலங்குகள் கொல்லப்பட்டு வந்ததற்கும் இது ஆதாரத்தைத் தருகிறது. ஹிம்சையை பார்த்து மனம் வருந்திய தர்மர்கூட தன் தம்பிகளுக்கும், திரௌபதிக்கும், காட்டில் வாழ்ந்து வந்த பார்ப்பனர்களுக்கும் உணவு தர தினந் தோறும் ரூரூ மான்களையும், கிருஷ்ண மிருகத்தையும் வேட்டையாடியதாக இதில் விவரிக்கப்பட் டுள்ளது. பார்ப்பனர்களின் உணவில் இறைச்சி சாதாரணமாக இடம் பெற்று வந்தது என்ற தகவலை ஆதிபர்வத்தில் இடம் பெற்றுள்ள கல்மாசபாதம் என்ற கதை கூறுகிறது. ஜெயத்ரதனுக்கும்...