Tagged: இராமன் பட எரிப்புப் போராட்டம்

‘இராமன்’ பட எரிப்பு: த.பெ.தி.க. – தி.வி.க. தோழர்கள் கைது

டெல்லியில் ‘இராவணன்’ உருவத்தை எரித்துக் கொண்டாடும் இராமலீலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ‘இராமன்’ படத்தை எரித்து பதிலடி தந்தனர். இராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தின் அருகே இராமன் படம் எரிக்கப்பட்டது. 11 தோழர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழக இணையதளம் பொறுப்பாளர் விஜயகுமார், காஞ்சி தினேஷ்குமார் ஆகியோரும் வழக்கில் இணைக்கப்பட்டு ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர் பெரியார் முழக்கம் 20102016 இதழ்

பெரியார் – இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்?

பெரியார் – இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்?

1956இல் புத்தருடைய 2500 ஆவது ஆண்டு விழா சென்னை இராஜாஜி மண்டபத்தில் அரசினர் சார்பாக நடைபெற்றது. அந்த விழாவில்,  பெரியாரும் கலந்து கொண்டார். விழா நிகழ்ச்சியை சென்னை வானொலி நிலையம் பதிவு செய்து இரவு 10 மணிக்கு ஒலிபரப்புவதாக உறுதி அளித் திருந்தது. ஆனால், அதன்படி அது செய்யவில்லை! நாளேடுகளும் பெரியார் கலந்து கொண்டதால் புத்தர் விழாவை வெளியிடாமல் இருட்டடிப்புச்செய்தன. “ஒரு வார காலத்துக்குள் பதிவு செய்தவற்றை வானொலி நிலையம் ஒலிபரப்ப வேண்டும். அல்லது, அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும். இல்லா விட்டால், இராமன் படம் கொளுத்தப்பட்ட செய்தி மக்கள் அறியும்படி செய்யப்படும்” – என்று பெரியார் அறிவித்தார். 20.7.56 அன்று திருச்சிராப் பள்ளியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், “1.8.56 அன்று தமிழ்நாடு எங்கிலும் இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தப்படும்” என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. “கடவுள் தன்மை, ஒழுக்கம், நாணயம், சாதாரண அறிவு...