Tagged: இந்து அறநிலையத்துறை

இராமகோபாலனே! கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது யார்?

இராமகோபாலனே! கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது யார்?

‘இந்து முன்னணி’ இராமகோபாலன் அய்யர் அவ்வப்போது அறநிலையத்துறைக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவார். இந்து கோயில்களை அரசின் அறநிலையத் துறை கட்டுப் படுத்தக் கூடாதாம். ‘இந்து’க்களைக் கொண்ட தனி வாரியம் அமைத்து, அவர்களின் முழுக் கட்டுப் பாட்டிலேயே விட்டுவிட வேண்டுமாம். இதே போன்ற அறிக்கையை இப்போது மீண்டும் வாந்தி எடுத்துள்ளார். இந்துக் கடவுளர்கள் அரசுக் கட்டுப் பாட்டில் இருக்கக் கூடாது என்றால் அது பார்ப் பானின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதே ‘இவாளின்’ துடிப்பு! அப்படித் தான் 1927 வரை இருந்தது. கோயிலில் குவிந்து கிடந்த நிலங்களும், தங்கம், வைரம், வெள்ளி, வைடூரியங் களும் பார்ப்பனர்களால் சுருட்டப்பட்டன. இந்த பெருச்சாளிகளிடமிருந்து மீட்பதற்கு முதல் கடிவாளம் போட்டது, நீதிக்கட்சி ஆட்சி தான். பனகல் அரசர்  முதலமைச்சராக இருந்தபோது, அவர்தான் மக்கள் வழங்கிய சொத்துக்களை பார்ப்பனர்களின் கொள்ளையிலிருந்து தடுக்க அறங்காவலர்களைக் கொண்ட ஒரு வாரியத்தை உருவாக்கினார்.  இராமகோபாலய்யர் கதறிக் கொண்டிருக்கும்...

நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் என்ன? : கோயில் பார்ப்பனர்களின் உடைமையா?

நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் என்ன? : கோயில் பார்ப்பனர்களின் உடைமையா?

கோயில்களின் நிர்வாகத்தில் தலையிடும் உரிமை அரசுக்கு உண்டு என்பதை வலியுறுத்தி, கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்துள்ளன. தீட்சதர்கள் – இந்து மதத்துக்குள்ளேயே தனிப் பிரிவினர். இவர்களின் உரிமைகளை அரசி யலமைப்புச் சட்டத்தின் 26 பிரிவு உறுதி செய்கிறது. எனவே, தீட்சதர்கள், தில்லை நடராசன் கோயிலை நிர்வகிக்கும் உரிமையில் அரசு தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சட்டத்தின் 26 ஆவது பிரிவு, பார்ப்பனர்களுக்கான பாதுகாப்பு ஆயுதமாக இருந்து வருகிறது. பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் எரிக்கப்பட்ட பிரிவுகளில் இதுவும் ஒன்று. சமணர்கள் தனிப் பிரிவாக இருந்தாலும்கூட, சமணக் கோயில்கள், இந்து சட்டத்தின் கீழ்தான் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தீட்சதப் பார்ப்பனர்கள் ‘முன் குடுமி’ ஒன்றைத் தவிர, ஏனைய ஸ்மார்த்தப் பார்ப்பனர்களைப் போன்ற கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். தீட்சதப் பார்ப்பனர்கள் பூணூல் அணிந்து, தங்களை “பிராமணர்கள்” என்றுதான் அறிவித்துக் கொள்கிறார்கள். கோயிலுக்குள் ‘ஓதுவார்’...