Tagged: இந்துவாக சாக மாட்டேன்!

இந்துவாக சாக மாட்டேன்!

இந்துவாக சாக மாட்டேன்!

கெடுவாய்ப்பாக, நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்: நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன். தனித்து இருந்த ஒரு நீர்த் துளி கடலிலே கலந்து, கரைந்து தன் இருத்தலைத் தொலைப்பது போல் ஒரு தனி மனிதன் சமூகத்தில் கரைந்து தன் முழுமையைத் தொலைத்துவிடுவதில்லை. மனிதன் சுதந்திரமானவன். அவன் இந்த சமூகத் திற்குத் தொண்டு செய்வதற்காகப் பிறக்க வில்லை. தான் மேம்பாடு அடைவதற் காகவே பிறந்தான். இந்தக் கருத்து புரிந்து கொள்ளப் பட்டதாலேயே வளர்ந்த நாடுகளி லெல்லாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அடிமைப்படுத்திவிட முடிவ தில்லை. தனி மனிதனுக்கு எந்தவொரு பாத்திரமும் வழங்காத மதம் எனக்கு ஏற்புடையதில்லை. அதனால் தனி மனிதனை ஏற்றுக்கொள்ளாத இந்து மதம் எனக்கு ஏற்புடையதாயில்லை. ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே...