Tagged: இந்துத்துவ அரசியல்

இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (3) இட்லர் – முசோலினியை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். க. முகிலன்

இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (3) இட்லர் – முசோலினியை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். க. முகிலன்

ஆர்.எஸ்.எஸ். எதற்காக – ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்ற அறிக்கையில் ஹெட்கேவர் கூறுகிறார்: “மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத் தின் விளைவாக நாட்டில் தேசியத்துக்கு ஆதரவு குறைந்து கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தினால் தோற்று விக்கப்பட்ட சமூகத் தீமைகள் ஆபத்தான முறையில் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றன. தேசியப் போராட்ட வெள்ளம் வடிந்தவுடன் பரஸ்பர விரோதங்களும் பொறாமைகளும் மேற்பரப்புக்கு வந்துள்ளன. வெவ்வேறு சமூகங்களுக் கிடையே சண்டைகள் ஆரம்பமாயின. பிராமணர்-பிராமண ரல்லாதார் சண்டை மிக வெளிப்படையாக நடைபெற்றது. எந்த ஸ்தாபனமும் ஒற்றுமையாக இல்லை. ஒத்துழையாமைப் பாலை குடித்து வளர்ந்த இசுலாமியப் பாம்புகள் தமது விஷ மூச்சினால் கலகங்களைத் தூண்டின.” சோதிராவ் புலே 1870இல் தொடங்கிய பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாகிய – உண்மை நாடுவோர் சங்கமும், 1920ஆம் ஆண்டு முதல் மராட்டியத்தில் மேதை அம்பேத்கர் உருவாக்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கமும் வலிமையாக இருந்ததையும், இசுலாமியர் தங்களுக்குரிய பங்கைக் கேட்பதையும்தான் ஹெட்கேவர் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். ஹெட்கேவருக்குப் பின்...

க. முகிலன் இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (2) சீர்திருத்தங்களை எதிர்த்த திலகர்

க. முகிலன் இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (2) சீர்திருத்தங்களை எதிர்த்த திலகர்

முஸ்லிம் அல்லாதவர்களில் மிகப் பெரும்பான்மையினரையும், வருணாசிரம அமைப்புக்கு வெளியில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் இந்துக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவந்து அவர்கள் எல்லாருக்கும் பொதுவான இந்து உரிமை இயல் சட்ட நெறிகளை (மனுஸ்மிருதி) முதலானவற்றின் அடிப்படையில், ஆங்கிலேயே ஆட்சி 1860இல் உருவாக்கியது. 1860க்கு  முன்பு வரை, இந்தியாவில் ஒரே சீராக எல்லா இடங்களுக்கும் எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் பொருந்துகிற, பொதுவான சித்தாந்த உள்ளடக்கத்தைக் கொண்ட இந்துச் சட்டம் (ழேைனர உடினந) என்று ஏதும் இருந்ததில்லை. ஆனால் சங்பரிவாரங்கள் வேதகாலம் முதல் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி இருந்து வந்தது போலவும், அதை மீண்டும் நிலைநாட்டுவதே இந்தியர்களின் – இந்திய நாட்டின் சுயமரியாதையை மீட்டெடுப்பதாகும் என்றும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன.  ஆங்கிலேயரின் ஆட்சியாலும் கருத்துகளாலும் இந்து மதம் பல அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வேதகாலம் முதல் பார்ப்பனியம் காலத்துக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, தன் ஆதிக்கத்தை நீடிக்கச் செய்யும்...

இந்துத்துவ அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை

இந்துத்துவ அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை

“மதத்தின் மேலாண்மையும் படிநிலைச் சமூகத்தின் நிலைத்த தன்மையும் பெருந்தாக்கு  தலுக்குள்ளாகும் காலத்தில்தான் தேசம் என்ற ஓர்  அமைப்பு, அக்காலத்தின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவு  செய்யும் வகையில் உருவாகத் தொடங்குகிறது” என்று வரலாற்று அறிஞர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.  அய்ரோப்பாவில் 15ஆம் நூற்றாண்டில் தொடங்கிய அறிவொளிக் காலம், எதையும் கேள்விக்குட்படுத்தி ஆராய்வது என்ற அறிவுத் தேடலை ஊக்குவித்தது. அச்சுக் கலையின் கண்டுபிடிப்பு பரந்துபட்ட அளவில் மக்கள் நூல்களைப் படிக்கும் வாய்ப்பை உருவாக்கியது. இதன் விளைவாக வளர்ந்த அறிவியல் மனப்பான்மை மத நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக எழுந்தது; பிறப்பு, இறப்பு, சாவுக்குப் பிந்தைய வாழ்வு முதலியவை பற்றி மதம் முன் வைத்த வாதங்களைக் கேள்விக்குட்படுத்தியது. அதேகாலக் கட்டத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகளின்  உந்துவிசையால் வளர்ந்த முதலாளியம், பழைய நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பும், கிறித்துவ மத ஆதிக்கமும் தன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதால் அவற்றை வீழ்த்த முனைந்தது. இதன் விளைவாக அய்ரோப்பாவில் தேசியம், தேச-அரசு, சனநாயகம், சுதந்திரம், தனி...